பந்தாடும் தீவிரவாதம்

கால்பந்து மைதானத்தில்
கால் போட்டு குண்டு மிரட்டலா?
ஆடுகளத்தை - ரத்த
ஆறுகளமாக்க
யார் நினைத்தது?
பின்னிய வலைக்குள்
மின்னலாய்
வந்து விழும்
பந்தாட்டதுக்கு
சதி வலை
பின்னியது ஏனோ?
தீவிரமாய்
தலை தூக்கி ஆடும்
கால் பந்தாட்டத்தில்
தீவிரவாதம்
தலை தூக்க
ஒரு காலும்
அனுமதியில்லை !

எழுதியவர் : Sivakumar (8-Sep-13, 7:04 pm)
சேர்த்தது : R Sivakumar
பார்வை : 59

மேலே