வலிகளின் வானவில்...!

விரிந்து கிடக்கிற நீல வானத்தில்...
வெண்முகிலாய் என் எண்ணங்கள்...
வேகமாய் ஓடி மறைய,
சட்டென உருவான இடிமின்னலில்...
அழுதுகொண்டே.... விழுகின்றேன்!

மீண்டும் நான் வானவில்லாய்... வண்ணங்களோடு!
வண்ணங்களை கொடுத்துச் சென்ற...
கருமுகில்களுக்கு நன்றி!

எழுதியவர் : ஒருவன் கவிதை (8-Sep-13, 7:34 pm)
சேர்த்தது : ஒருவன்
பார்வை : 84

மேலே