பிணம் தின்னும் மனிதர்கள்
இன்று காலை தொலைக்கட்சியில் செய்தி !!!
மூவரை கைது செய்தது சென்னை காவல்துறை.
செய்தது குற்றம் அல்ல பெருங்கொடுமை.
"இலங்கை அகதிகளை ஏமாற்றி பண மோசடி" -
ஆஸ்திரேலியா செல்ல ரகசிய ஏற்பாடு
ஆசை காட்டி பணம் பறித்த சந்தர்ப்ப சதி
எப்படி வேலை செய்கிறது இவர்கள் மதி !!
புத்தியும் செல்வாக்கும் இருந்தால்
தொழில் செய்து பிழைக்கலாமே - அதை விட்டு
ஏனிந்த துரோகச் செயல் ???
அதுவும் வஞ்சிக்கப்பட்டு நொடிந்து போன
சக தமிழனிடமா ??? வெட்கக்கேடு !!
நீங்கள் மாண்டு போன மனிதனின்
" பிணம் தின்னும் " மிருகத்தினும்
கீழான வஞ்சகர்கள் !!!
தமிழினம் உங்களை மன்னிக்காது