ஜோதிடம்
13 கட்டங்கள் வரைந்திருக்க
ராகு , கேது துணையிருக்க
குரு உச்சத்தில் இருக்க
சனி ஓரத்தில் இருக்க
வியாழன் குறுக்கே நிற்க
புதன் நடுவில் சஞ்சரிக்க
ஒரு
வெள்ளை காகிதம்
தீர்மானித்த வாழ்க்கை
எப்படி மலரும்
பூப்போல ,
கடவுள் துணையில்லாமல் ???
கடவுளே விதியை
மாற்ற இயலாதபோது
ஜோதிடனும் ,ஜோதிடமும்
எப்படி மாற்ற இயலும்
என நம்புகிறது
இவ்வுலகம்???
காகிதமும் ,கட்டங்களும்
மனித சிந்தனையின்
எதிரொலிகளே தவிர
விதியை மாற்றும்
கருவியல்ல !!!
எனவே
விதியை நம்புங்கள்
மதியுடன்
செயல்படுங்கள் !!!

