அந்த நாட்கள் எங்கே ...?

அந்த நாட்கள் எங்கே

கொண்டைச்சேவல் கூவி
காக்கைகள் கலவரமடைந்து
சிட்டுக்குருவி சிணுங்கி சிணுங்கி
கதிரவன் கரையை கண்ட
அந்த நாட்கள் எங்கே

இரவில் தன்னில் தூங்கிய
பனித்துளிகளை
தென்றல் காற்று தீண்டையில்
கூதல் கொள்ளாது உதறியவேளை
மரங்கள் சொன்ன
அந்த இரகசியம் எங்கே

புல்லை மேயும் தன் தாயின்
மடியை பிடித்து உலுக்கி
தன் பசியை தீர்த்த வேளை
அந்த கன்றுக்குட்டி அம்மா அம்மா என்று
கத்துமே
அந்த பாச ஒலி எங்கே

தும்பிகள் பிடித்து
அதன் இறகுகள் பிடிங்கி
அவை தடுக்கி தடுக்கி விழ
அதை கண்டு சந்தோசப்பட்ட
அந்த சுவடுகள் எங்கே

அம்மியில் பச்சை மிளகாய் அரைத்து
மண்சட்டியில் நெய் சேர்த்து
கருவேப்பிலையுடன் வதக்கி எடுத்த
அந்த மீன்குழம்பு வாசம் எங்கே

இத்தனையும் மீண்டும் பார்க்க
நான் என்ன செய்ய வேண்டும் .....?

எழுதியவர் : நுஸ்கி மு.இ.மு (10-Sep-13, 1:42 pm)
பார்வை : 142

மேலே