தொடரும் தேடல்.....

...தொடரும் தேடல்.....
முகவரி தெரியாத,
முகம் பதிக்காத,
முன்னுரைகள் தெரியப்படுத்தாத,
முற்றுப்பெறாத காவியமாக,
முழுமைபெறாத ஓவியமாக,
என் தேடலில் நீ.............,
இறுகிவிட்ட நினைவுகளை
இன்றளவும் இம்மியளவு கூட,
இளகச் செய்திட
இயலாததால்,
இன்னமும் தொடர்கிறது
என் தேடல் உனக்காக.........
விசும்பும் நினைவுகளை
விலக்கிட நினைத்து,
விதிசெய்த சதியை,
விந்தை பலசெய்து
விரட்டிட முயல்கையில்
விரக்தி தழுவுகிறது....
என் தேடலும் தொடர்கிறது.......
ஒரு நிலவு, ஒரு சூரியன், ஒரு மாலை, ஒரு காலை ...
ஒரு நினைவு..... ஒரு கனவு....
ஒரு தேடல்...........
என் தேடல் எனைத்தேடும் வரை..........!