அச்சச்சோ புன்னகை

என் கனவுகளின்
ஜன்னலை
திறக்கும் கைகள்
அவளுடையது......

முத்தங்களுக்கான
எனது காத்திருப்பை
மொத்தமாய் பூட்டிக்
கொள்வது அவளுடைய
உதடுகளாகும் ......

மாய பார்வையின்
மந்திரம் என்பது
மழை நாளில்
பேசிப் பிரியும்
அவள் தரும் வரம் ......

வான்காவின்
விரல் இடுக்கில்
மறைந்து கொண்ட
ஓவியம் இவள் எனில்
என் மனமெங்கும்
சுவராய் இனிக்கிறது.....

அத்திப் பழ காட்டில்
அத்து மீறி நுழைவதில்
திருடனாய் திமிர் பிடித்த
என்னை
மனம் உலுக்கி
மௌனம் நிறைந்தவளின்
இதழ்களில்
அச்சச்சோ புன்னகை .....

எழுதியவர் : கவிஜி (12-Sep-13, 9:43 am)
பார்வை : 129

மேலே