தெரியாம காசை முழுங்கிட்டேன்

:இன்று மழை வரும்னு செய்தியிலே சொன்னாங்க நீங்க கேட்டீங்களா?
:நான் கேக்கலைங்க அவங்களேதான் சொன்னாங்க
---------------------------------
:என்ன இது? ஒரு காலில் பச்சைக் கலர் ஷாக்சும், மற்றொரு காலில் வெள்ளைக் கலர் ஷாக்சும் அணிந்திருக்கிறாய்.
:சொன்னால் ஆச்சரியப்படுவாய்! என் வீட்டில் இதுபோலவே இன்னொரு ஜோடியும் இருக்கிறது.
--------------------------------
:இதோ போறாரே…அவரு ரொம்ப வேண்டியவருங்க!
:எந்த எந்த கோவிலிலே வேண்டியிருக்காரு?
--------------------------------
:சாப்பிட்டு முடிச்சவுடனே உன்னைப் பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை உன்கிட்ட என்னவோ கேட்டாரே, என்னவாம்?'
:இதே மாதிரி சாப்பாடு எப்பவும் கிடைக்குமான்னு "கண்ணீர் மல்க" கேட்டார்
---------------------------------
:வீட்ல ரெய்டு நடக்கற நேரத்துல தலைவர் தன்னோட மூன்றாவது மற்றும் நான்காவது மகன்களை எங்கேயாவது போய் ஒளிஞ்சுக்க சொல்றாரே…ஏன்?
:கணக்கில் வராத பிள்ளைகளாம்…!
---------------------------------
: பிரபல கடத்தல் மன்னன் வளர்த்த நாய் செத்துப்போச்சாமே? எப்படி?
:பின்னே… நாய்க்கு, தங்க பிஸ்கெட்டை போட்டு சாப்பிட வச்சிருக்கான்..
---------------------------------
:ஏன்டா தம்பி, உங்க அப்பா என்ன வேலை செய்றாரு?
:"எங்க அம்மா சொல்ற எல்லா வேலையையும் அவர்தான் செய்வாரு...!"
---------------------------------
:டென்த் படிக்கறபவே உங்க பையனுக்கு பிரைம் மினிஸ்டர் மூளை.
:நிஜமாவா?
:ஆமா எந்தகேள்வியைக்கேட்டாலும் பதில் சொல்லாம இடிச்ச புளி போல் இருக்கான்.
---------------------------------
: என்னப்பா தலைவர் மேடையில பேசுறப்போ ஓடா வந்து விழுது…?
: ஓட்டை அள்ளி வீசுங்கன்னு சொன்னதை தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க..
---------------------------------
: "அஜித்தோட மங்காத்தா பாத்தியா...?"
: "அஜித்தோட பாக்கல...தனியா போய் தான் பாத்தேன்"
--------------------------------
'I Am Going to Sleep' னா என்னடா அர்த்தம்?
:நான் தூங்க போறேன் .
:டேய் பதில் சொல்லிட்டு தூங்க போடா ' pls pls pls..!
--------------------------------
:"டாக்டர் தெரியாம.. காசை முழுங்கிட்டேன்''
:"என்ன காசு? ஒரு ரூபாயா... ரெண்டு ரூபாயா... அஞ்சு ரூபாயா?''
:"அதான் தெரியாம முழுங்கிட்டேன்னு சொன்னேனே டாக்டர்''..
--படித்ததில் சில கேட்டதில் சில