அழியும் அழகு .......

நீல வானம் தேடியே
என் பாதை போகுதே
காலம் மாறிப்போகையில்
நிறங்கள் செத்துப்போகுதே

பச்சையம் சுரக்கும் இலைகளும்
சருகாய் மண்ணில் விழுகுதே
இலைகள் அற்ற மரங்களும்
மண்ணில் இராஜாங்கம் அமைக்குதே

நீல நீளக்கடலும்
நிறம் மங்கிப்போகுதே
கப்பல் சுரக்கும் கழிவுகளை
தன் கற்பத்தில் சுமக்குதே

நிறமற்ற தென்றலும்
நிர்க்கதியாய் நிற்குதே
புகைகள் ஜீரணிக்கும்
ஜீவனாய் அலையுதே

தினம் புன்னகைத்த மலரும்
புதிய ஜென்மம் கேட்குதே
தன் வாழ்நாள் இழந்து
சவப்பெட்டியில் மட்டும் சிரிக்குதே

எழுதியவர் : நுஸ்கி மு.இ.மு (13-Sep-13, 2:39 pm)
Tanglish : aziyum alagu
பார்வை : 265

மேலே