விழுந்தேனே விழியிருந்தும்!!

உன் முகம் கண்ட அந்த நொடி முதல்
நான் விழி கொண்ட குருடன் ஆனேனடி!!
பார்க்கும் இடமெல்லாம் உன் முகம்
மட்டும் தான் என் கண்களுக்கு தெரிகிறதடி!!
என் வெள்ளை காகித மனதில்
நீயோ புரியா புன்னகை தீட்டி சென்றாய்..
நான் விழுந்தே போனேன்
உன் அழகில் நனைந்தே போனேன்
புது சிறகு முளைத்த பறவையும் ஆனேன்
நான் உன்னை கானும் போதே
பனிகட்டியாய் கரைகிறேன்
எரியும் மெளுகாய் உருகுகிறேன்
நான் வலிகிறேன் – உன்னிடம் பேசும்
போதெல்லாம் நிறைந்த குடமாய் வலிகிறேன்
இதை பார்க்கும் அனைவருக்கும்
நானோரு கேலிக்கை பொம்மையுமாகிறேன்!!
வானும் மண்ணும் மறைந்தாலும்
என் மனம் விட்டு உன் முகம் மறையாதே!!
என்னை மரணம் தீண்டும் போதும்
உன் மடியில் தான் சாய வேண்டும்
என தவம் செய்கிறேன்!!

எழுதியவர் : முரளிதரன் செங்கோடன் (13-Sep-13, 7:42 pm)
பார்வை : 146

மேலே