சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
மனிதர்களை தின்னும் ஒரு கூட்டம் அதில் ஒரு அப்பாவும் மகனும், சாப்பிட மனுசங்கள தேடி ரொம்ப தொலைவு நடந்தாங்க.
கொஞ்ச தூரத்தில ஒரு ஆள் நாய வாக்கிங் கூட்டிட்டு போய்டிருந்தான்.
" அப்பா அந்த ஆளு..." கைகளை உதறியபடியே கேட்டான் பையன்.
"இவ வேண்டாம்பா...இவன நாய்க்கு தான் போடனும்." உதட்டை பிதுக்கிட்டான் அப்பா.
இன்னும் கொஞ்ச தூரம் போனாங்க...ஒரு ஆள் நல்லா குண்டா இருந்தான்.
" அப்பா..." மறுபடியும் கைகளை உதறியபடியே கேட்டான் பையன்.
இவன் வேண்டாம் இவன தின்னா நமக்கு கொழுப்பு சாஸ்தியா பூடும். நாம ஹார்ட் அட்டாக் வந்து சாக வேண்டியது தான். வுட்டுடு.
பையனுக்கு பசி தாளமுடியல.
அடுத்து அழகான ஒரு லேடி வந்தா..
"அப்பா... இவ வேண்டாம்டா"
ஏம்பா ?
அழகா இருக்காடா...!
"இவள இப்படியே உட்றுவோம் முதல் உங்க அம்மாவ சாப்பிட்டரலாம். வா"
நன்றி இனியவை கூறல்

