வாழ்க்கை! -(அஹமது அலி)

என்று தொடங்கி
என்று முடியப் போகிறது....
))))
எல்லாத் தொடக்கமும்
முற்றை நோக்கிய
முன்னேற்றங்களாய்....
))))
ஒற்றை இலக்கு
எப்படியாவது
வாழ்ந்து விட....
))))
வாழ்க்கையை
கட்டிக் கொண்டு
அழுகிறோம்....
))))
வாழ்க்கையோ
ஆறுதல் சொல்லியே
சாகிறது...
))))
எத்தனை விரைவாய்
காலம் வாழ்க்கையை
நகர்த்திக் கொண்டு போய் விடுகிறது!
))))
முடிவில்
முடிவுரையும் எழுதி
முடிக்கிறது!
)))
காலத்தால்
அன்று தொலைத்த
குழந்தை
நேற்று தொலைத்த
சிறுவன்
இன்று தொலைத்துக் கொண்டிருக்கும்
இளைஞன்
))))
இப்படியே
முதுமையை விரட்டிப் பிடிப்பதில்
முழுமூச்சுடன் செயல்பட்டு
மரணம் எய்தப் பார்க்கிறது!
மகத்தான வெற்றியும் பெறுகிறது!
))))
வாழ்க்கையிடம்
தோற்று விடுகிறோமா?
வாழ்க்கையின் பிடியிலிருந்து
வென்று சென்று விடுகிறோமா?
என்ற கேள்வியும் எழுகிறது.......!?