காசுமட்டும் இருந்து விட்டால்

காசு மட்டும் இருந்துவிட்டால்
போதுமடா தங்கம்
தடியூன்றி நடந்தாலும்
நீதாண்டா சிங்கம் ..

சொந்த பந்த பாசத்திற்க்கும்
விலை ஒன்னு இருக்கு
நீதி நேர்மை பேசுறவன்
உலக பாஷையில் கிறுக்கு ...

சாமியோட அருளுக்கும்
காசுதான அளவுகோல்
ரூபாதான கடவுளோட
கருவறைக்கும் திறவு கோல் ...

நீ நல்லவனா வாழும் வாசம்
நாலு வீடு வீசும்
நாலு காச வீசிப்பாறு
மொத்த ஊரும் பேசும் ....

காசிருந்த செத்தபின்னும்
சிலை வடிக்கும் தம்பி
புரிஞ்சுகிட்டா வாழாதடா
பாவ புண்ணியம் நம்பி .....

இடஞ்சலில்லாம இத்துப்போக
தனிக்குழியும் கிடைக்கும்
பணக்கார பொணமும் கூட
சந்தனமா மணக்கும் ...

காசு சேர்க்க கத்துக்கடா
எதுவும் இங்க தப்பில்ல
காச எதுத்து நிக்கிறதுக்கு
கடவுளுக்கும் துப்பில்ல ...

எழுதியவர் : வரதராஜ் கி (15-Sep-13, 10:02 am)
பார்வை : 120

மேலே