குமுறல் நெஞ்சம்

தூசு படிந்த
பகல் பொழுது
நிலவொளியில்
நிலைத்திருகிறது...

வெள்ளைச் சுவரில்
கைநழுவி சிதறுண்ட
கருப்புப் பூச்சு போல
நிலவுக்குத் திரையிட்டு
நிம்மதியாய் தூங்கிற்று
கரு மேகங்கள் ....

மயான அமைதியாய்
ஊரது உறங்கிட
முகாரி ராகம் மீட்டி
தெம்மாங்கு பாடல் பாடி
இனிதே இசைக்கச்சேரி முடித்து
குட்டித்ததூக்கம் போடுகிறது
தெருவோர நாய்க்கூட்டம் ....

இத்தனைக்கும் மேலாய்
என் வீட்டு சேவல் கூட
அதிகாலையில்
ஆனந்தமாய் கடமை செய்திட
அமைதியாய் தூங்குகிறது ....

அனால்
இந்த பாலாய் போன
பாவியின்
காதல் நெஞ்சு மட்டும்
தூக்கம் இழந்து
துக்கத்தில் துவண்டு கிடக்கிறது

எழுதியவர் : பிரகாசக்கவி எம் .பீ அன்வர் (16-Sep-13, 3:19 pm)
பார்வை : 157

மேலே