தென்றல் வந்து செல்லும் என் இதய கூடு 555
உயிரானவளே...
கண்களை மூடி வைக்கும்
இமைகளை போல...
என் இதயத்தில் உன்னை
மூடி வைத்தேன்...
தென்றல் வந்து செல்லும்
இதயகூட்டில்...
தேவதை போல்
வந்தாய்...
தேடி கிடைக்கவில்லை...
உன் அன்பை எனக்கு
தேடாமலே கிடைத்தாய்...
கொடியில் மலரும்
மலரை போல...
என்னில் மலர்ந்தாய்
காதல் மலராக...
கேட்காமலே
வாரி கொடுத்தாய்...
உன் அன்பினை
எனக்கு...
என் அன்பை நீ
உணராமலே...
கண் இமைத்து
சென்றாய்...
நீ உணரும் நேரம்...
உன் அருகில் நான்
இல்லாமல் இருப்பேன்...
எதோ ஒரு
திசையில் அப்போது...
உன் விழிகள்
கலங்கினால்...
என் கரம்
கொண்டு வருவேன்...
கண்ணீர்த்துளிகளை
ஏந்த அல்ல...
உன்னையே நான் என்
கைகளில் ஏந்த...
என்னுயிரே.....

