வந்தியத்தேவனாய் நான்.....

உன்னோடு நகரும் போது....
நொடிகள் முடமாகிப் போனாலும் ...
மகிழ்ச்சி தான்....
என்னோடு எப்போதும் நீ இருப்பாய்.....


ஒவ்வொரு முறை...
உன்னை வாசிக்கும் போதும்....
புதிதாகிறாய்.....
பத்து முறை படித்த பின்னும்.....
பைத்தியமாக்குகிறாய்.....

ஒவ்வொரு முறையும்.....
பழமை எய்தி...
புதிய வாசம் வீசுகிறாய்.....
கடந்த காலத்தில் ...
புதைக்கப்பட்ட பழரசமாய்.....
போதையேற்றுகிறாய்....


காற்று வெளியிடை எங்கோ....
காதருந்து பறக்கிறேன்.....
உனக்குள் எங்கோ எனை
இழுத்து கொள்கிறாய்...

எந்த இடம் இது?
என நான் பார்க்க....


வீரநாராயணபுரத்து ஏரியின் கரையில்.....
பதினெட்டாம் பெருக்கு நாளில்....
வெண்புரவியில் நான்...
வந்தியத்தேவன்.....
பயணித்து கொண்டிருக்கிறேன்...
கல்கியின்
"பொன்னியின் செல்வன் " சாலையில்.....

எழுதியவர் : (17-Sep-13, 11:28 am)
பார்வை : 79

மேலே