krishnamurthy - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : krishnamurthy |
இடம் | : madurai,tamilnadu |
பிறந்த தேதி | : 22-Jun-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 14-Mar-2011 |
பார்த்தவர்கள் | : 526 |
புள்ளி | : 415 |
ஏதோ கொஞ்சம் கவிதை எழுதத் தெரிந்த கணினி மாணவன் ....
என் தோள்.... உன் தலையணை....
உன் கண்கள்....என் கண்ணாடி....
என் கைகள்...உன் சில்மிஷ காவலன்..
உன் கூந்தல்...என் திரைச்சீலை..
என் உதடு....உன் உணவு....
உன் காதுமடல்.....என் வீணை....
இது என் கவிதை....தருவதோ உன் அர்த்தம்....
என்னை ரசிக்க விடு....
என் கவிதையை....
நீ ஒவ்வொரு முறை பேசும் போதும்....
பிறக்கும் புதுப்புது கவிதைகளால்....
ரசிக்க முடியாமல் போகிறது உன்னை.....(இப்போது புரிகிறதா.... யார் என் கவிதை என்று?)
உன் இதழின் சிவப்பு மெய்யா?... பொய்யா?.....
என் இதழால் சோதிக்க அனுமதி தருவாயா?....
உனைப் பார்த்த பின் ....
இதயம் இரு துண்டானது...
ஒரு பாதி உனக்காக துடிக்க.....
மறுபாதி எனக்காக துடிக்க.....
எப்போதடி அது நமக்காக துடிக்க.....
அன்பை சுமப்பதெனில்....
இயேசுவாய் பிறப்பதற்கும் தயார் தான்....
மரணத்தின் வாசலிலும்.....
முதுகில் சிலுவைக்கு பதிலாய்....
அன்பை சுமக்க வேண்டும்.......
பார்ப்பதெல்லாம்
மஞ்சளாக தெரிந்தால்
உனக்கு காமாலை.....!
இருப்பதை உன்னால்
காண முடியவில்லையென்றால்
நீ கபோதி........!
உணரத் தெரிந்தும்
உணர முடியவில்லையென்றால்
நீ ஜடம்......!
உணர முடிந்தும்
உளறிக் கொண்டிருந்தால்
நீ பிணம்.......!
கண்டால் தான்
கடவுளை நம்புவேன் என்றால்
உன் உயிரைக் காட்டு...?
முடியாது போனால்
நீ இறந்து காட்டு...!
உன்னைப் பெற்றது
உன்னப்பன் தான் என்பதை
கண்டு நம்பும்
நீயொரு தனி ரகம்.......!
இருக்கின்ற கடவுளை
நாங்கள் நம்பித் தொழுகிறோம்
அதுவொரு தனி சுகம்....!
இல்லாத கடவுளை
நீயேன் பழிக்கிறாய்...?
கடவுள் இல்லையென்று
நாங்களும் நம்பத் தயார்...!
எ
காஞ்சி பட்டு ஆரணிப் பட்டு
நெல்லை பட்டு மதுரை சுங்குடி
மாம்பழ மடிப்பு அன்னப் பறவை தலைப்பு- என
ஒவ்வொன்றையும் அடுக்கும் போதும்
சொல்லாமலே வந்து விடுகிறது ....
இன்னும் பட்டுத் திருவிழா நாள்(திருமண நாள்)
எனக்கு வரவில்லை என்கிற ஏக்கம்...
-இப்படிக்கு,
(குடும்ப நிலை காரணமாய் திருமணம் தள்ளிப் போய்க்கொண்டிருக்கும்
ஆயிரக்கணக்கான பட்டு மாளிகையின் பணிப்பெண்களில் ஒருத்தி....)
வெள்ளத்துளிகளில் ஏதோ ஒரு
துளியால் உருவாகி.....
சுருண்டு கிடந்து.....
பின் ..சூரியக் கதிர் பட விரிந்தெளுந்து...
பச்சையம் தீரும் வரை.....
பண்டமாற்றம் நடத்தி...
சுயம் தீர
மெல்ல சருகாகி சருகாகி... பின்
உலர்ந்து ஓர் நாள்...
மரணிக்கும் சருகாய் நானும்.....
ஒரு நாள் உதிர்ந்து போவேன் என்றறிந்தும்.....
பச்சையம்(பணம்) தேடும் பந்தயத்தில்...
வேகம் குறைக்க முடியாமல் ......