வாய் பேசு - சூபி கவிஞர் அஹமது அலி

பார்ப்பதெல்லாம்
மஞ்சளாக தெரிந்தால்
உனக்கு காமாலை.....!

இருப்பதை உன்னால்
காண முடியவில்லையென்றால்
நீ கபோதி........!

உணரத் தெரிந்தும்
உணர முடியவில்லையென்றால்
நீ ஜடம்......!

உணர முடிந்தும்
உளறிக் கொண்டிருந்தால்
நீ பிணம்.......!

கண்டால் தான்
கடவுளை நம்புவேன் என்றால்
உன் உயிரைக் காட்டு...?

முடியாது போனால்
நீ இறந்து காட்டு...!

உன்னைப் பெற்றது
உன்னப்பன் தான் என்பதை
கண்டு நம்பும்
நீயொரு தனி ரகம்.......!

இருக்கின்ற கடவுளை
நாங்கள் நம்பித் தொழுகிறோம்
அதுவொரு தனி சுகம்....!

இல்லாத கடவுளை
நீயேன் பழிக்கிறாய்...?
கடவுள் இல்லையென்று
நாங்களும் நம்பத் தயார்...!

எந்த மூலப் பொருளும் இல்லாமல்
சிறு பொருளொன்றை
நீ படைத்துக் காட்டு...!

உயிரை படைப்பதும்
உயிரை எடுப்பதும்
கடவுளென்கிறோம்...!

எங்கே...
எங்கள் கடவுள் தந்த உயிரை
துறந்து காட்டு...?

இல்லாது போனால்
இறக்காமல் நீ
இருந்து காட்டு...!

முடிந்தால்
வாய் பேசு...
இல்லையென்றால்
வாயை மூடு...!!!

எழுதியவர் : சூபி கவிஞர் அஹமது அலி (19-Jul-14, 12:42 am)
பார்வை : 678

மேலே