உன்னையே நினைத்து
இருப்பது ஒரு இதயம்
அது, உனக்காய் துடிக்கிறது,
இரு பத்து நாலு மணி
அது உனைததான் நினைக்கிறது.
இரு விழி இமை மூட,
ஏனோ மறுக்கிறது,
என்,
விழி நோக்கும் வழி எல்லாம்
உன்
பிம்பம் ஜொலிக்கிறது.
இடமாய் வ்லமாய் என்,
கால்கள் நடக்கிறது,
மரகதம், மாணிக்கம் எல்லாம்
உன் முன் மதிப்பிழந்து
கிடக்கிறது.
உன் வாய்மொழி
அது மதுரமாய் இனிக்கிறது,
உன் வசைமொழி கூட கேட்க,
என் செவிகள் துடிக்கிறது.
நீ இருக்கும் இடமதுவே,
என் இருப்பிடமாயிருக்கிறது,
இதயம்,
இருநொடி கூட உன்னை இழந்திட
மறுகிறது.
இத்தநையும் எனக்குள்ளே,
எதற்காய் நிகழ்கிறது,
இதற்கேணும் பதில்லிருந்தால்,
மனம் அறிந்திட நினைக்கிறது.
--பாலா