கனவு மெய்ப்பட வேண்டும்

வெறுமையாய் விரிந்து
கிடக்கும் என் பிரிவுச் சாலையில்
தனியாக நடக்கின்றேன்!

சாலையில் யாருமில்லை
சோலையில் பூக்களில்லை
துணையென எவருமில்லை
துயரங்கள் விலக வில்லை

அர்த்த ராத்திரியில்
என் கனவுகளில் கூட
தனிமை! தனிமை! தனிமையே

பெற்றவர்கள் கூட
பிறந்தவர்கள் உற்றவர்கள்
என்னோடு ஒன்றான தோழர்கள்
யாருமே இங்கில்லை

வரண்ட விழிகளில் நீரில்லை அழுவதற்கு
இதயம் அழுகிறது இதை யாரரிவார்

முற்றத்து நீலாவெளியில்
சுற்றத்தார் கூடி இருந்து
சுக துக்கம் பேசும் நாள்
என்று வருமோ??

காத்திருக்கின்றேன் என்
கணவு மெய்ப்பட
வேண்டுமென்றும்

எழுதியவர் : பீ.கே.நசீர் (19-Sep-13, 5:33 pm)
சேர்த்தது : sameer
பார்வை : 99

மேலே