நீ ,நீ மட்டும்தான் !..
நீ !
இழப்பதற்கு ஒன்றுமில்லை ..
இழப்பென்றும் எதுவுமில்லை
பெறுவது புதிதென்பதால் !
தவறென்று எதுவுமில்லை ..
சரியென்பது சரியாகின்றது ..
தவறி விழாமல் நிலை பெறும்போது !
வெற்றி என்று எதுவுமில்லை ..
பெறும் அனுபவங்களெல்லாம்
பெருமைக்கு உரியதே !
சாதனைகள் என்று தனியாக
வேறொன்றுமில்லை ..
சாதிக்க நினைத்துத் தொடங்கும்
சிறு சிறு முயற்சிகளும் சாதனைகளே!
சரியான தீர்வு இதுதானென்று
எதற்கும் எதுவுமேயில்லை ..
முதலில் ஒருவர் காணும் அவரின்
தீர்வே பெரிதும் பின்பற்றப்படுகிறது,
இயல்பான எளிமையான
வழிமுறைகளும் உண்டென அறிய விரும்பாமல் !
ஆதலால் ,
நீ ,நீ மட்டுமே தான்!
உன் விருப்புகளும் வெறுப்புகளும்
உனக்கு மட்டுமே ..
பிறர் மன எண்ணங்கள்
உன் எல்லைகளுக்கு அப்பாற்பட்டவை ..
நீ , நீயாகவே இரு !
மற்றவர்க்காக நீ மாறினால் ,
ஒரு நாள் நீயே தொலைந்து போவாய் !..
உனக்கான கதவுகள் திறக்கப்படும்போது !
நீயொன்றும் நானில்லை !
நான் என்றும் நீயாக முடியாது !..
நீ, நீ என உணர்ந்தால் ,
அனைத்திலும் நீயாகிப் போவாய்!
அழிவில்லா முடிவுடன்
அர்த்தமான எதார்த்தங்களை
எதிர்நோக்கி !..........