என்னுடன் பிறந்தவள்

நான் பிறப்பதற்கு
முன்னமே பிறந்து
விட்டவள்

நான் குழந்தையாய்
இருக்கும்போது பார்த்து
கொண்டவள்

இருட்டிலே பயந்த
என்னை தைரியப்
படுத்தியவள்

என்னை உப்புமூட்டை தூக்கி
பல்லை உடைத்து
கொண்டவள்

நான் படிக்க
அவள் படிப்பை விட்டு
கொடுத்தவள்

என் கல்லூரி புகார்களை
வீட்டிலே மறைத்து
வைத்தவள்

வேறெங்கு சென்றாலும்
எனக்காக ஏதேனும் வாங்கி
வருபவள்

வேலை இல்லாதபோதும்
என்னை யாருக்காகவும் விட்டு
கொடுக்காதவள்

திருமணம் ஆனபின்பும்
தினம் ஒரு முறை
என்னிடம் பேச
மறக்காதவள்

அவள் வேறு யாருமல்ல
என்னுடன் பிறந்த மற்றொரு
தாயவள்

என் அக்கா...

குறிப்பு : என்னுடைய அக்காவிற்காக நான் எழுதியது...

எழுதியவர் : நவீன் (19-Sep-13, 6:40 pm)
Tanglish : ennudan piranthaval
பார்வை : 149

மேலே