கடைசி 5 நிமிடம்!!!!!!!

மெழுகாய் நான்
திரியாய் என் நட்பு
தீ(நீ)யாய் எரிவது
நான் மட்டும் இல்லை
நண்பா எனக்குள் இருக்கும்
நீயும் தான் ....
உன்னை ஒருபோதும் நான்
வெறுத்ததும் இல்லை
உன்னை விலகி செல்ல
நினைத்தும் இல்லை நண்பா...
யார் யாரோ நம் நேசத்தை
நிராகரித்த போதெல்லாம்
நான் கலங்கவில்லை நண்பா
நீ யாரோ நான் யாரோ
என்று நீ சொல்லும் வரை...
கத்தி இல்லாமல்
என்னோடு
யுத்தம் செய்யாமல்
ஒரு சொட்டு இரத்தம்கூட
வராமல் என் உயிர் போகும் வரை
என்னை துடிக்க துடிக்க கொள்கிறாயே
நண்பா உன் பிரிவால்......
நான் உயிரோடு உள்ள வரை
நாம் நட்போடு வாழும் வரை
உன்னை சுவாசித்துக்கொண்டே
இருப்பேன் நண்பா..
இல்லை நேசித்துக்கொண்டே
இறப்பேன் நண்பா..
இதயத்தை கல்லாக மாற்றிவிட்டு
நீ என்னோடு பேசிய
அந்த கடைசி ஐந்து நிமிடங்களை
நினைதுப்பார்த்தால் இப்போதும் என்
கண்களில் இரத்தம் வடிகிறது நண்பா...
என்னோடு பேசாமல் உன்னால்
இயல்பாக இருக்க
முடியும்மா முடியாதா
என்று சோதிக்கத் தான்
இத்தனை நாள் பேசாமல் இருந்தேன்
என்று சொல்லி
பேசிவிட மாட்டாயா என்று
ஒவ்வொரு நாளும் ஏக்கத்துடன்
காத்திருக்கிறேன் நண்பா நான்...
தண்ணீரில் இருந்து தரையில்
விழுந்த மீன் போல்
உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறேன்
என்னை தூக்கி தண்ணீரில் விடாமல்
இரக்கமே இல்லாமல்
என்னை பார்த்தும்
சுலபமாக செல்கிறாயே
எனக்கு என் முடிது தான்
முக்கியம் என்று....
கருத்தறியாக் கவிதை
என்று என் நட்பை
கிழித்தெறியாதே நண்பா....
அமைதியாகப்
படிதுப்பார் ஆயிரம்
பொருளிருக்கும்....
மரண வலிகூட தோற்துப்போகும்
நண்பா நேசித்த நீ வெறுத்துப் பேசும் பொது..
ஆண் பெண் என்னும்
வேற்றுமையை வெட்டி எறிந்து
நட்பு என்னும்
கருவறையில் ஒன்றாக
பிறந்த இரட்டையர்கள் அல்லவா நண்பா நாம்..
என்னை வெறுத்து
ஒதுக்குவதில்
உனக்கு இன்பம்
நீ வெறுத்தாவது
பேசிவிட்டால் எனக்கு இன்பம் ....
உன்னைப்போல் எனக்கும் கற்றுக் கொடு
நண்பா இதயத்தை கல்லாக
மாற்றுவதற்கு
நானும் வலியை உணராமல்
இருப்பேன் அல்லவா??
மெழுகுவர்த்திக்கு உயிர் கொடுக்க
உயிர் விடும் தீக்குச்சி
உயிர் கொடுத்த நண்பனை
நினைத்து நினைத்து உருகும்
மெழுகுவர்த்தி ஆனால்
நீ பிரிவு என்ற மெழுகுவர்த்தியை
எற்றிவிட்டையே உயிர் விட்டதும்
உருகுவதும் நாம் நட்பு தான் நண்பா புரிந்துக்கொள்....
சித்தம் கலங்க
உள்ளம் ஏங்க
திங்கள் சுட
தென்றல் தழுவ
கண்களில் ஈரம் கசிய
காரிருள் மேகங்கள் சூழ
மெளனத்தில் எதிர்பார்ப்பு
இழந்தவளாய் காவிரி கண்களில்
பெருக காத்திருக்கிறேன் நண்பா
நான் உன் நட்பிற்காக!!!!!!!...
மேன்மையானவனே ...
என் நண்பன் நீ
உன் நட்பால் வாழும் தோழிநான்
எத்தனை முறை
காலம் நம்மை பிரித்தாலும்
மீண்டும் இணைவோம்!!
என் மீதோ உன் மீதோ
உள்ள நம்பிக்கையில்
அல்ல....
நம் நட்பின் மீதான நம்பிக்கையில்..
விரைவில் சந்திப்போம்
விழித் தூரலுடன்!!!!!!!!
உன் அன்புத் தோழி