ஒரு சோற்று டப்பாவின் அழுகை கடுதாசி
என்னுள் சாதம் வைத்து அதற்கு மேல்
தொட்டுகையும் அடுக்கி ,என்னை உன்
பள்ளிக்கு கொண்டு செல்கிறாய்.
ம்ம் ...உனக்கு ஆசிரியரை விட,
என் மேல் தான் அதிக கவனம் .
ஆம் ! என் மீது உனக்கு ஒரு கண் .
உன் நினைப்பில் நிறைந்திருப்பேன்.
உன் வயிறு பசியால் கிள்ளும் போது,
நீ என்னை தூக்கி தட்டி திறப்பாய்.
முதலில் நீ என்னை சுவைத்து விட்டு பிறகு
உன் நண்பர்களுடன் என்னை பகிர்வாய்.
நான் எல்லோர் கையிலும் மாறி மாறி வருவேன் .
இறுதியில் உன்னை சேர்வேன் .
உனக்கு பிடித்த உணவு என்றால்
மிச்சம் மீதி வைக்க மாட்டாய் .
உனக்கு பிடிக்காதது என்றால் அப்படியே
என்னுள் வைத்து விடுவாய் .
நீ பட்டினியாய் இருப்பாயே என்று எண்ணி
வருந்துவேன்.........
ஐய்யோ ! நீ உன் தாயிடம் திட்டு வாங்க
போகிறாயே !......
என்ன செய்வது ?
என்று எண்ணி' நொச',,'நொச' வென்று கண்ணீர் விடுவேன்.
உன் தாய் என் வாயை திறந்தவுடன்' குப் 'பென்று
வாசம் காற்றில் வீசும் .
"ஏனடி மிச்சம் ?" என்று அவரிடம் திட்டு வாங்குவாய் .
மன்னித்து விடு..............
என்னை மன்னித்து விடு ......
உன்னை காட்டி கொடுத்ததற்காக !!
இப்படிக்கு
சோகமாய் உள்ள சோற்று டப்பா :(