குட்டி கவிதை

கலவர உலகத்தில் கவலை இல்லாமல்
அழது சிரிக்கும் குட்டி கவிதை நாங்கள்!
பொய் சொல்லும் உலகத்தில்
மழலை மொழியில் புரியாத புதிர்போடும்
விடையில்லா விடுகதை நாங்கள்!
சுயநலமாய் இருக்கும் உலகத்தில்
தன்நிலை தெரியாமல்
தத்திதவளும் தாமரை நாங்கள்!
ஆள் வளர்ந்தும் அறிவு வளரா
மனிதர்களுக்கு நடுவில்
புதிதாய் அரும்பும் மூன்றாம் பிறை நாங்கள்!
அறிவியலை நோக்கும் அறிஞருக்கு
சித்தி்ரை கிறுக்களும்
அதிசயமாய் தோன்றும்
அறிவியல் கோட்பாட்டின்
சொந்தக்காரர்கள் நாங்கள்!
அவசரமாய் சுற்றும் பூமிக்கு நடுவில்
இத்தனை அழகையும் இரசிக்கும்
மனிதர்களுக்கு தட்டுப்பாடு!
இதனால் நாங்கள் அரம்பித்தோம்
குழந்தைகள் அருங்காட்சியகம்!
இப்படிக்கு குழந்தைகள்.

எழுதியவர் : மதி (22-Sep-13, 7:27 am)
Tanglish : kutti kavithai
பார்வை : 107

மேலே