காலச் சுழற்சி மனித வீழ்ச்சி -(அஹமது அலி)

காலம் , கடிகாரம்
முறையே சுழலும் வேகத்தில்
இறுதி நாட்களை
வெகு சீக்கிரம்
தொட்டு விடும் போல....
/)))
இவைகள்
நாட்களை ஓட விட்டு
நாளும் நாளும்
சாதனை முறியடிப்பு
செய்கின்றன...
/))))
வயதுக்கு வைத்த கெடுவை
எட்டிப் பிடிக்க
நொடி முட்களின் மீதும்
பயணம் செய்கின்றன ....
/))))
ஒவ்வொரு முறையும்
நொடி முட்கள்
நகரும் போதும்
வயதுக்கு வெடி வைக்கின்றன ....
/))))
வாழ்வின் அர்த்தங்களை
பொடி வைத்துப் பேசுகின்றன
/))))
இவற்றை அறியாத
மனிதர்களை
மணிக்கொரு முறை
ஒலியெழுப்பி
டிங் டாங் ஓசையில்
கேலி செய்கின்றன...
/))))
மனிதன் மட்டுமே
தன்னையும் அறியாமல்
மரணத்தை எதிர்பார்த்து
காத்திருக்கிறான்...
/))))
இல்லைஎன்றால்
காலைஎழுந்ததும்
நேரங்காட்டியில் கண் விழித்து
நாட்காட்டியை துகிலுரிந்து
ஆயுளை குறைக்க
அவசியமும் அவசரமும்
கொள்வானா ....

எழுதியவர் : அலிநகர், அஹமது அலி (22-Sep-13, 8:11 am)
பார்வை : 113

மேலே