ஏனோ புதிதாய் கண்களில் கலக்கம்

புன்னகை என்னும் முகவரி நான் அறிந்து கொண்டேன் உன்னில்

என் துன்பத்தில் என்னை மாற்றி
புன்னகைக்க வைத்த நீ

மனதில் குழப்பத்தோடு கண்ணீர் விடுகையில்
நெஞ்சம் ஏனோடி பொறுக்கவில்லை

உபதேசம் ஊருக்கு என்று பதில் அளித்தால்
விடை இருந்தும் கேள்வி அறியாத
பாவியாகிறேன்

உன் மௌனத்தில் என் மனம் மௌனமாகிறது
பேச மொழியின்றி பரிதவிகிறது

வேதனை மாறாமல் ஏனோ புதிதாய் உன் கண்களில் கலக்கம்

நான் தோற்கிறேன் உன் கண்ணீர் மாற்ற முயற்சிக்கும் தருனத்தில்

இன்னொருமுறை தோற்க மனமில்லை
புன்னைகைக்க மாட்டாயா

என்றும் உங்கள்
உமா நிலா

எழுதியவர் : உமா நிலா (22-Sep-13, 10:48 am)
பார்வை : 71

மேலே