ஆர்ப்பரிக்கும் ஆன்மாக்கள் !

முட்டாள்
மந்திரிமார்
முப்பதுபேர் இருக்கையிலே ...!

கச்சான் காற்றடித்து
கழுதைக்கும்
காமம் வரும் !

மந்திக்கும்
மசக்கை வந்து
மாங்காய்
மரம் கேட்கும் !

இவர்
தெருவோரம் செல்கையிலே
தேவாங்கும்
தேர் பிடிக்கும்

பல்லி
பால் குடிக்க,
பாம்பும்
கொசுப் பிடிக்கும் !

மூளையில்லா
முண்டங்களும்
மதவாத
மண்டுகளும்
மாநாடு நடத்தும் !

அரசு எனும்
ஆந்தை கண்ணில்
அவர் பதவி
அந்தரத்தில்
அல்லல் படும் !

ஆணையிட்ட
ஆன்மாக்கள்
அஷ்ரப்எனும் பெயர் சொல்லி
அனுதினம் ஆர்ப்பரிக்கும் !

குறிப்பு -

இக் கவிதை இன்றைய இலங்கை
முஸ்லிம் அரசியல் வாதிகளின் கையாளாகாதனங்களை பிரதிபலிகிறது .

எழுதியவர் : பிரகாசக்கவி எம்.பீ அன்வர் (23-Sep-13, 12:13 pm)
சேர்த்தது : prahasakkavi anwer
பார்வை : 85

சிறந்த கவிதைகள்

மேலே