மகளின் தேடல் ...

கடிகாரம் கத்துதுப்பா
வீடு ஊமையா நிக்குதுப்பா
கனவுக்குள்ள இருப்பது போல காட்சிகள் நகருதுப்பா
ஏன் கண்ண கட்டிப்புட்டு
இந்த கெட்ட கனவுக்குள்ள என்ன விட்டு

எங்கப்பா போனிங்க
எங்கிட்ட சொல்லாம

நீ தூங்கும் கட்டில் இங்க
தனியா தூங்குதுப்பா
நீ போட்டிருந்த அழுக்கு சட்ட
ஆணியல தொங்குதேப்பா
ஒன்கூட சேந்து தேஞ்ச செருப்பு
வாசல்ல கிடக்குதேப்பா
அவ்வளவு அவசரமா
எங்கப்பா போனிங்க
செருப்பு கூட போடாம

எங்கப்பா போனிங்க
எங்கிட்ட சொல்லாம


பொய்யா நா அழுதாலும்
பொறுக்க மாட்டிங்களேப்பா
இப்ப அழுது அழுது ஏன் கன்னம்
கரைஞ்சு போகுதேப்பா
அத கூட கவனிக்காம
எங்கப்பா போனிங்க
ஏன் கண்ணீர துடைக்க இங்க இல்லாம

எங்கப்பா போனிங்க
எங்கிட்ட சொல்லாம

வெளிய தெரு போகும் போது
வாசல் வர போய் திரும்பி
“வரேன்னு”
சொல்லும் குரலுக்கு
இந்த முறை என்ன ஆச்சு?
எங்கிட்ட எதுவும் சொல்லாம போச்சு
அவ்வளவு அவசரமா
எங்கப்பா போனிங்க
சொல்லிட்டு போக
நேரம் இல்லாம

எங்கப்பா போனிங்க
எங்கிட்ட சொல்லாம

பட்டம் வாங்கும் நேரத்துல
பெத்தவரு உடனிருக்க
சிரிப்போடு எல்லாம் இருக்காங்கப்பா
நா மட்டும் ஏன் சிரிப்ப
தேடிக்கிட்டு இருக்கேன்ப்பா
எப்போதும் போல இல்லாம
எங்கப்பா போனிங்க
தனியா என்ன இங்க தேடவிட்டு

எங்கப்பா போனிங்க
எங்கிட்ட சொல்லாம

வெளிச்சத்துல மறஞ்சு போன உன் முகத்த
இருட்டுக்குள்ள இருந்து நா தேடுறேன்ப்பா
எங்கப்பா போனிங்க
எங்கிட்ட சொல்லாம

எங்க தான்ப்பா போனிங்க நீங்க
எங்கிட்ட சொல்லாம

நா தொலைச்ச ஏன் சிரிப்ப
தேடி வர போனிங்களா
வாயாடி புள்ளைக்கு
வரன் தேடி போனிங்களா
எங்கப்பா போனிங்க
எப்ப நீங்க வருவிங்க

எழுதியவர் : சுதாகர் கதிரேசன் (23-Sep-13, 3:50 pm)
Tanglish : makalin thedal
பார்வை : 57

மேலே