+கற்காலத்தை நோக்கி...!+
சமூகத்தை
திருத்தவந்தவர் எல்லாம்
திருந்திவிட்டனர்!
மீண்டுமொருமுறை
முயலக்கூடாதென்று..!
மீண்டும் வந்தால்
மீளுவோமா இல்லை
மூழ்குவோமோ என்ற எண்ணத்தில்
விலகிக்கொண்டனர்!
இவனும் வாழவந்தான்!
அவனும் வாழவந்தான்!
இருந்தும் அடித்துக்கொண்டு சாகிறான்!
சொர்க்கத்திற்கோ நரகத்திற்கோ
இடம்பிடிக்க போகிறவன் போல....!
நாகரீகம் என்ற பெயரில்
சிறிதுசிறிதாக
ஆதிமனிதனாகிக் கொண்டிருக்கிறான்!
உடைகளைத் துறந்தும்
மூளையை பயன்படுத்த மறந்தும்...
கவலைப்படாதே மனிதா!
கற்காலம் உன்னை வரவேற்க
வழிமேல் விழிவைத்து காத்திருக்கிறது!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
