வருடம் பிறக்கும்போது !
![](https://eluthu.com/images/loading.gif)
பத்துபதினைந்து நிமிடங்கள் முன்னர்
பச்சிளம் குழந்தையோடு நான்
அழுது கொண்டிருக்கும் அதற்கு
ஆண்டின் பிறப்பை பொம்மையாய்
வித்தியாச வெடிகளில் காட்டி
வீதியின் கோயில் சத்தம் கூட்டி
இனிப்பை உதட்டிலும் வைத்து
ஏராள வித்தைகள் செய்தாலும்
நெஞ்சினில் எட்டி உதைத்து
நிறுத்தாத எச்சில் ஒழுகளோடு
அடம்பிடித்த அதன் கன்னத்தில்
ஆசை முத்தம் கொடுத்தேன்
பொக்கை வாயை திறந்து அழகாய்
பூ போன்ற கையினால் அசைத்து
வரவேற்கும் விதமாக வருடத்தை
வாயால் மழலையில் குளறி
புன்னைகை பூத்தது புத்தாண்டாய், அது
அழும்போது தடுமாறி போனாலும்
அடுத்த நிமிடத்தின் மாற்றத்தை
குழந்தையின் குட்டி குறும்போடு
கொண்டாடுகின்றேன் இதுவரையில்