தமிழர் கூட்டமைப்பு வெற்றி ஈழத்தில் ...

வெற்றி செய்தி கிட்டியதால்
இன்பம் இமயத்தை எட்டியது !
சிங்களவனின் ஆட்டத்தை அடக்கிய
சிங்கத் தமிழனின் கொண்டாட்டம் !
இடைக்கால வெற்றிதான் எனினும்
இறுதிக்கால துவக்கமே ராஜபக்சேவிற்கு
துள்ளிடும் தமிழனின் நிலைஅங்கு
துயர்களை மறந்திடும் நிகழ்வானது !
மகிழும் எம்இனத்தவரின் மனமும்
நிலைத்திட விழைகிறேன் அங்கே !
முடிவல்ல இதுவேஎன அறிவோம்
முடிவின் தொடக்கம் ஆரம்பமே !
தலைமை ஏற்பவரும் மாறாது தமிழன்
நிலையை மாற்ற வேண்டுகிறேன் !
வேண்டியதும் மாகாணத் தேர்தலைதானே
வேங்கையவன் வேலுப்பிள்ளை பிரபாகரன் !
உரிமைதானே கேட்டான் தமிழன் அன்றும்
உயிர்களை பறித்தானே வெறிநாய் வென்றிட !
விவேகம் வேண்டும் விக்னேஸ்வரருக்கு
வீரமும் விளைந்திட வேண்டும் அவருக்கு !
சிங்களவனின் கைப்பாவையாக ஆகாமல்
சீறிடும் தமிழனாய் ஆண்டிட வேண்டும் !
ஈழத் தமிழனின் இரண்டாம் அத்தியாயம்
வேழ பலத்துடன் துவங்கிட வேண்டும் !
தமிழனின் கொடி நிலையாய் பறந்திட
தமிழர்கள் நாங்கள் வேண்டுகிறோம் !
வாழ்த்துக்கள் ஈழத்தமிழர்க்கு
தொடங்கிடுக புது வாழ்வை !
நாட்டிடுக வெற்றிக்கொடியினை
வளரும் தலைமுறை வாழ்ந்திட !
பழனி குமார்