@@@ நெருப்புக் கூண்டு @@@
பறந்து விரிந்த உலகுதன்னில் - சிறகடித்த
---பறவையிவள் எண்ணங்களை எடுத்து
எரிதீயில் போட்டு பொசுக்குகின்றனர்- சமுதாய
---எதிர்ப்பார்ப்பென்று என்னை ஏமாற்றி
அறிவு சுரங்கத்தில் அருளிய - பொருளென்று
---அறத்தோடு வளர்த்து அழகுநடைபோட
புகழ் முன்னேற்றம் பெண்ணிற்கு - வேண்டாமென
---புழுகலேற்றம் மனதில் நிரப்புகிறார்கள்
பருவ வயதினிலே முடித்திடனும் -திருமணம்
---பக்குவமாயென்று பனிக்கட்டியாய் உருக்கி
மயக்குகின்றனர்; பள்ளி வயதிலே -பதியம்போட்டு
---மனதில் பசுமரத்தாணியான என்லட்சியத்தை
உண்மைகளை எடுத்துக் சொன்னால் - ஊரார்க்கு
---உணராத வாயாடியென்று பெயர்
தற்காப்புக் கலை கற்று - நடைபோட்டால்
---தகாத அடங்காப்பிடாரி இவள்
சுதந்திரமென சுற்றித்திரிந்து சுடும் -பாதைச்செல்ல
---சுரத்தை இல்லாத பெண்ணல்ல
அடைப்பட்ட கூண்டில் சுதந்திரமுடன் - வாழ
---அடிமை பெண்ணும் நானல்ல
சுதந்திர நாட்டினில் சுதந்திரமுடன் - என்
---கூண்டின் சுற்றுத்தளம் என்சுதந்திரம்
நெகுகிறது என்மனம் திறமைகள் - பொசுங்க
---நெருப்பிலிட்ட என்மனம் வேகுகிறது
(சமூகமென்னும் நெருப்புக் கூண்டுக்குள் அடைப்பட்டு நானிங்கு என முன்னேற துடிக்கும் ஒரு பெண்ணின் குமுறல்கள் )
...கவியாழினி...