உன் நினைவுகளால்

உருகிக் கரைகிறேன்
உன் நினைவுகளால்
அனால்
என் விம்மல்கள் எல்லாம்
உனக்கு புலம்பல்கள்
புரியாத புதிராக
தெரியாத கதிராகுமோ?
என் விடியல்கள்?
கிழக்கைத்தான்
தேடிப்பார்கிறேன்
மேற்கு எனைப்பார்த்து சிரிக்கிறது
நீ எனக்கு சொந்தமென...
காற்றலைகழுள் தேடிப்பார்க்கிறேன்
உன் குரலை
ஆயிரம் தடவைகள் பார்த்துவிட்டென்
அலைபேசியை
அழைக்க ஆவலிருந்தும்
அழைக்க முடியாத அபலை நான்
அழமட்டுமே முடிகிறது.....