மாற்றங்கள்

ஏ பெண்ணே !!
பூவாக இருந்தேன்
முள்ளாக மாற்றினாய்
பூங்காற்றாக இருந்தேன்
புயலாக மாற்றினாய்
ஆமையாக இருந்தேன்
முயலாக மாற்றினாய்
மென்மையாக இருந்தேன்
வன்மையாக மாற்றினாய்
பஞ்சாக இருந்தேன்
பாறையாக மாற்றினாய்
தீபமாக இருந்தேன்
தீப்பந்தமாக மாற்றினாய்
அமைதியானவனாக இருந்தேன்
ஆக்ரோஷமானவனாக மாற்றினாய்
பசுங்கன்றாக இருந்தேன்
பாயும்புலியாக மாற்றினாய்
சாதுவாக இருந்தேன்
சண்டியனாக மாற்றினாய்
சலனமற்ற நதியென இருந்தேன்
சீறி பாயும் வெள்ளமென மாற்றினாய்
இம்மாற்றங்களை விரும்பியவளும் நீ
மாற்றிய பின் ஏற்க மறுப்பதும் ஏனோ??
மாற்றம் தந்தவள் நீ
மனம் மாறாதிருப்பது ஏனோ??
புரியாத வினாவாகவும் நீ
புரியாத பதிலாகவும் நான் !!!