காற்று

இலக்கற்ற பயணமாக இருந்தாலும் இசைப்புள்ளின்
இயக்கத்தை நிறுத்தாத இளம் தென்றல்தான்.

மலையினூடே, மரத்தினூடே செடிகொடியினூடேயென
பாரபட்சமற்ற பக்குவமான பயணம்தான்.

பலநேரம் பரபரப்பாய் பறந்து திரிந்தாலும்
அரக்கனாய் அடித்துத் தின்னும் சுனாமியல்ல

தலையசைத்து நடனமாடி சலசலத்து கீதமிசைத்தாலும்
குருவிவாழும் கூட்டிற்குள் குரோதமாய் நுழையாத குருத்து

உருவமுமில்லை வேலிதாண்டி நுழையும் வஞ்சமுமில்லை
உதிரம் சொரியும் வலியையும் உறைந்து நீக்கும் உத்திரவாதம்!

மலர்வனத்தில் மணம் பரப்பும் கீதம் சுமந்து சிம்மாசனமிடும்
வேதாந்தி விவேகானந்தனையும் வருடிய வரம் பெற்ற வளி!

எழுதியவர் : பவள சங்கரி (30-Sep-13, 11:51 am)
பார்வை : 84

மேலே