தமிழக அரசின் இலவச மருத்துவ ஆலோசனை மையம் 104
இந்த எண்ணில் தொடர்பு கொண்டால் உங்களின் பெயர்,முகவரி,தொலைபேசி எண்கள் கேட்கப்பட்டு உங்களின் அழைப்பு அரசு மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுவதற்கு இணைக்கப்படும். அம்மருத்துவரிடம் உடனடியாக ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.ஆலோசனை கூறும் மருத்துவர்கள் பெரும்பாலும் பெண் மருத்துவர்களே தற்போது உள்ளனர்.இச்சேவை மையம் தற்போது பகல் நேரங்களில் மட்டுமே இயங்குகிறது. கூடிய விரைவில் 24 மணிநேர மற்றும் கட்டணமில்லா இலவச தொடர்பு எண்ணாக மாற்றப்படும் என கூறப்படுகிறது. தற்போது விலைமதிப்பிலா ஆலோசனை மட்டும் இலவசம், ஆனால் அழைப்பு கட்டணம் உண்டு. தன்னிகரில்லா மக்கள் நல அரசு,எந்நேரமும் ஏழை மக்களின் நலனில் அக்கறை உள்ள அரசு என்பதற்கு அம்மாவின் அரசு ஒரு சிறந்த எடுத்துகாட்டு என்பதற்கு இத்திட்டம் ஒரு சிறந்த எடுத்துகாட்டு.