+எப்படியடி விளங்கும்?+
விளங்கவில்லை!
விளங்கவில்லை!
விளங்கவில்லை!
என்று வகுப்பில்
நீ சொல்லிக்கொண்டிருந்தாய்!
பாடத்தில் உனக்கு என்ன விளங்கவில்லை
நீ ஆசிரியரிடம் ஏன் இப்படி
சொல்லிக்கொண்டிருக்கிறாய் என
நான் உன்னைப்பார்த்தால்
நீயோ என்னைப்பார்த்துக் கொண்டிருக்கிறாய்!
நீ வகுப்பில் அவரைக் கவனிக்காமல்
என்னை கவனித்தால்
எப்படியடி விளங்கும்?
ஆமாம்.
நீ விளங்கவில்லை எனச் சொன்னது
பாடத்தையா? என்னையா?
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
