ஒருமுறை நினைத்து பார்!!

கண்முன்னே இருந்து வதைக்கும் வலிகளுடன் வாழ்ந்து பார்!!

கண்ணீரால் கரையும் நிமிடங்களை உன்னுடன் இருத்தி வைத்து பார்!!

காரணம் அறியா மெளனங்களை பரிசாக வாங்கி பார்!!

பார்வைகள் வீசி எறிந்து செல்லும் கோபங்களை சகித்து பார்!!

ஏங்கி நிற்கும் நிமிடங்களை இறக்கி வைக்காமல் சுமந்து பார்!!

கண்ணீருடன் கேட்ட கேள்விக்கு புன்னகையை பதிலாக வாங்கி பார்!!

சிறு பதிலுக்காக பல மணி நேரங்கள் நினைவுடன் காத்திருந்து பார்!!

தவிர்க்க நினைத்து தவிப்புகளை சுமக்கும் பாவியாகி பார்!!

அப்போதாவது என் ரணங்களை ஒருமுறை நினைத்து பார்!!

கண்ணீரில் நனைந்து போவாய்!!

எழுதியவர் : மலர் (3-Oct-13, 2:11 pm)
பார்வை : 118

மேலே