பேரின்பம் பெறலாம்

நீலவானம் தொட்டிடும் நீலக்கடல்
நீந்திடும் பாய்மரமோ பாற்கடலில் !
படகில் பயணம் பரவசம் தந்திடும்
பாடிடும் மனமும் இசையுடன் பாடல் !
இதயம் குளிர்ந்திடும் இன்பமுடன்
இடரில்லா தென்றலும் தொட்டிடும் !
சூழலும் நம் நெஞ்சை வீழ்த்திடும்
சுழன்றிடும் உள்ளமும் மயங்கிடும் !
மோதிடும் அலைகள் பேசிடும் நம்மிடம்
பேரின்பம் பெறலாம் வந்தால் இவ்விடம் !
பழனி குமார்