கனவு
கனவு காணலாம் என்று
கண்ணை மூடினேன் !
வந்தது கனவு அல்ல
கவலை !
எதிகாலத்தைப் பற்றி !
இன்று கனவு கண்டேன்
நாளை நனவாகும் என்று
ஆனால் ,
நாளை என்பது
இன்றானது !
இன்று என்பது
நேற்றானது !
இவ்வாறு ,
எதிர்காலம் ,நிகழ்காலமாகவும்
நிகழ்காலம் இறந்தகாலமாகவும்
மாறியதே தவிர
எதிர்கால கனவு மட்டும்
கேள்விக் குறியாகவே
இருக்கிறது !!!
இந்த ,
கேள்வி குறியானது
மாறவேண்டும்
ஆச்சர்ய குறியாக ...
என் வாழ்வு
நிற்க வேண்டும் உயர்வாக !!!