என்றும் அவள்

அவள் அள்ளி முடிந்த கூந்தலில்
கிள்ளி எடுத்த மலர் சூடினாள்
கொஞ்ச நேரத்தில் மலர் வாடுது
என் மனம் ஏனடி வாடுது
என் கண்ணனம்மா

அவள் கன்னக்குழியின் அழகில்
பல கவித்துவம் பிறக்கிறது
காணும் பல விழிகளில்கார்
மழை கொட்டுகிறது

ஆராவமுதம் படைக்கும் அன்னைக்கு
மகளாய்ப் பிறந்தும் அளவில்
என்றும் சிறியவள் அவள்

கல் என மாறி இருந்த போதும்
கண் சொல்லெடுத்து என்னை
சிதைத்தவள் அவள்

முரண்பட்ட போதும் உடன்பட்ட
போதும் என்றும் உன்னவள்
நான் என்றவள் அவள்

எழுதியவர் : thiya (8-Oct-13, 4:54 pm)
சேர்த்தது : thiya
Tanglish : endrum aval
பார்வை : 144

மேலே