இருட்டு..!

இருட்டு
இரவின் திரட்டு
களவுக்கும் கலவிக்கும் பொறுப்பு..

இருட்டு
வெளிச்சத்தின் முன்னோடி..

இருட்டை இகழ்பவர்கள் கூட
வெளிச்சத்தில் வேஷம் போடுகிறார்கள்..

இருட்டை
பழக்கி கொள்ளுங்கள்
வெளிச்சத்தின் தேவை குறையும்..

இருட்டையும்
பழகி கொள்ளுங்கள்..
தோல்விகளின்
காயம் குறைக்கும்..

எழுதியவர் : கவிதாயினி (8-Oct-13, 8:48 pm)
பார்வை : 113

மேலே