மனக்கணக்கில் `மொய்`கள்

`மொய்` கள் எப்போதும்
எல்லோர் மனதிலும்
ஞாபகத்திலிருக்கும்
பசுமரத்தாணியாய்........!

கொடுத்ததைக் கொடுக்கும் சில..
கொடுத்ததைக் குறைக்கும் சில..
கொடுத்ததை மறக்கும் சில...
வட்டியுடன் வழங்கும் சில...!

வெறுங் கைவீசி வரும் சில...
நிகழ்வின் பூரிப்பில்
எதிர்பார்ப்பின்றிக் கொடுக்கும் சில..
வாழ்த்துடன் விடைபெறும் சில ....!

அடிக்கடி நிகழ்வுகள் வந்தால்
மொய்களின் அளவும் குறையும்
அத்தி பூத்தாற்போல் வந்தால்
மொய்களின் தொகையும் கூடும்..!

எல்லோர் மனதிலும் இருக்கும்
வழங்கும் மொய்க் கணக்கு
அறிந்தே நிகழ்வில் வழங்குவர்
பாத்திரமறிந்து மனக் கணக்கில்....!
-----------------------------------------------------------------
தோழி துர்க்கா

எழுதியவர் : தோழி துர்க்கா (8-Oct-13, 8:39 pm)
சேர்த்தது : தோழி துர்க்கா (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 128

மேலே