முற்றும் உள்ளவனே முழு மனிதன்

அதீத பாசம் அம்மாவிடம்
அவன்தான் பித்தனா ?
அதிக பற்று தாய்மொழியிடம்
அவன்தான் பித்தனா ?
அதிக நேசம் நண்பனிடம்
அவன்தான் பித்தனா ?
அதிக நேயம் மனதினில்
அவன்தான் பித்தனா ?
அதிக அன்பு காதலியிடம்
அவன்தான் பித்தனா ?
அதிக இரக்கம் ஏழையிடம்
அவன்தான் பித்தனா ?
அதிக ஈடுபாடு சமூக நீதியில்
அவன்தான் பித்தனா ?
அதிக வெறி சாதி ஒழிப்பில்
அவன்தான் பித்தனா ?
அதிக ஆசை மதமின்மையில்
அவன்தான் பித்தனா ?
அதீத உணர்வு தமிழின்பால்
அவன்தான் பித்தனா ?
அனைத்தும் உள்ளவன் ஒருவன்
அவன்தான் பித்தனா ?
இல்லை இல்லவே இல்லை
அவன்தான் உண்மை மனிதன் !!!!!
தேடுகிறேன் அவனை நானும்
நாடிடுவேன் அறிந்தால் அவனை !
முற்றும் துறந்தவன் துறவி என்பர்
முற்றும் உள்ளவனே முழு மனிதன் !
பழனி குமார்