சொன்னது நானல்ல-3

மாதம் மும்மாரி

மழை பொழிந்து...

தடையாய் இருக்கும்

அணைகள் உடைந்து....

தரிசு நிலங்களும்

பயிர்கள்

விளைய வேண்டும்

விளைந்த பொருட்களும்

விலை போகவேண்டும்

விலைபோன செல்வத்தை

வீதியில் உள்ள

டாஸ்மாக்கில்

தொலைக்காமல்....

வாழும் மக்கள்

உள்ள நாடே.....நல்ல நாடு

ஆனால்.....

வாடும் மக்கள்

உள்ள நாடே....நம்ம நாடு

சொன்னது நானல்ல....

வள்ளுவர்

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (9-Oct-13, 6:48 pm)
பார்வை : 288

மேலே