கர்ப்பிர்கில்லை மரியாதை!!!
இன்று அவள்
ஆடையை அவிழ்க்க
போகாமல்
அசந்து தூங்கிவிட்டாள்...
விடியகாலை
பாலுக்காக கதறியழும்
ஒரு வயது
பெண் குழந்தை...
அம்மா சிலேடு
வாங்கணும்
காசு குடும்மா
இரண்டாவது படிக்கும்
ஆறு வயது
மகனின் கென்சல்...
இரண்டு நாளாய்
மாத்திரை இல்லாமல்
இரும்பிக்கொண்டே
இருக்கும்
நுரையீரல் பாதிக்கப்பட்ட கணவன் ...
இன்னும் கொஞ்ச
நேரத்தில் வந்துவிடுவான்
கடன் கொடுத்த
தன்டால்காரன்
பணத்தை வசூலிக்க...
இன்று அடுப்பு
எரியப்போவதில்லை
வயிறு மட்டும்தான்
எரியபோகிறது
அதை அணைப்பதற்கு
ஒருபானை தண்ணீர்
கொண்டுவந்து வைத்துவிட்டாள்...
கண்ணகி பொறந்த மண்ணாம்
இந்த மண்ணில்
பொறந்த
இவளுக்கு ஏன்
இந்த கதி...
கர்ப்பைகூட
வித்தாச்சி
விற்க இனி
என்ன இருக்கு இவளிடம்
எஞ்சி இருப்பது
என்னவோ
வறுமையும்
வைறுப்பசியும்தான்...
பாவம்!
பலபேரை
சுமந்த அவள்
இன்று பாவத்தையும்
சேர்த்து சுமக்கிறாள்..!!!