முழுமதி முகமதியாள்

முழுமதி முகமதியாள் ஒருவள்
முழுநிலவு இரவன்று ஒருநாள்
முழுக்க விழித்துச் சிந்தித்தாள்
முழுதாய் ஒருவனை நம்பியே
முழுமனது முடிவும் எடுத்தாள் !
முழுக்க விடியல் வருவதற்குள்
முழுப்பொய் ஒன்று சொல்லிட்டு
முழுதும் முகத்தை முக்காடிட்டு
முழுதும் நம்பிய பெற்ற்வர்களை
முழுகிட முடிவெடுத்து நடந்தாள் !
முழுதும் தெரியாத மூலையில்
முழுக்க தெரிந்திடக் காத்திருந்தாள் !
முழுமனதுடன் ஏற்பதாகக் கூறியவன்
முழுதும் விடிவதற்குள் வந்திடுவான் என !
முழுமுதலாய் எண்ணியதால் அவளும்
முழுவாழ்க்கையை அவனுடனே
முழுதும் வாழ்ந்து முடித்திடலாம்
முழுவதும் களிப்புடன் கழித்திடலாம்
முழுக்க முழுக்க மகிழ்ந்திடலாம் என
முழுகனவு நினைவில் நின்றிருந்தாள் !
முழுதும் விடிந்து முடிந்தது ஆனாலும்
முழுதும் நம்பியவனோ வரவில்லை !
முழுதும் அழமுடியாமல் வெம்பினாள்
முழுமனதும் சோகத்தால் நிரப்பினாள் !
முழுதும் தெரியாத அவள் தந்தையோ
முழுதாய் அறியாமல் வந்தார் அப்பக்கம் !
முழுமனதும் நிறைந்த மகளைக் கண்டார்
முழுதாய் கேட்பதற்குள் காரணத்தை
முழுதும் மனம் வெடித்து அழுதிட்டாள்
முழுதாய் அதிர்ந்த அவள் தந்தையும்
முழுக்கதையைக் கேட்டார் அவளிடம் !
முழுதுஞ்ச் சுற்றியுள்ளோர் காண்பதற்குள்
முழுமனதும் கரைந்து அழைத்திட்டார் !
முழுதும் மூழ்கிய துக்கத்தை மறைத்து
முழுமனத்துடன் சென்றாள் தந்தையுடன் !
முழுக்க நாள் முழுதும் அழுதவளை
முழுநேரமும் தேற்றினர்ப் பெற்றோர் !
முழுவதையும் மறந்து முடிவெடுத்தாள்
முழுக்க முழுக்க நம்பிய பெற்றவர்களை
முழு அன்பையும் ஊட்டி வளர்த்தோரை
முழுவாழ்வு முடியும்வரைப் பாசமுடன்
முழுதாய் புதிதாய் நல்முத்தாய் என்றும்
முழுமனதும் மாறிட்ட மங்கையாய் இனி
முழுமையாய் முடிவெடுத்துப் படுத்திட்டாள்
முழு விடியல் வந்தவுடன் எழுந்திட்டாள்
முழுதும் மறந்திட்டுத் தொழுதாள் பெற்றோரை !
பழனி குமார்