மாட்டு பொங்கல்
எனக்கு பால் கொடுத்த பசு
என்னை ஞாபகம் வைத்து
இப்போது கோமியமாவது கொடுக்கும்
மாட்டு பொங்கல் கொண்டாட
மறக்காமல் சென்றிடுவேன் ஊருக்கு
கால் கட்டை அவிழ்த்து
காளை ஊசியும் தவிர்த்து
குட்டைக்கு இழுத்து, இன்று
குளிப்பாட்டி வைப்பனே
அங்காடி அரிசி பொங்கி உனக்கு
அம்மாவுக்கு நிகராய் படைத்தாலும்
எட்டி உதைக்காமல் என்னை
இதுவரை மறக்கவில்லை நீ
நக்கி பார்த்திடுவாயே
நகரத்து வாழ்வில் நான்
சிக்கி சிதைந்தாலும் உன்
சீம்பால் மறக்க முடியுமா ?