ஒரு கிராமத்தில் நாளை ?
சுற்றுலா கிராமம் சொன்னால் கேளுங்கள்
சுவை மிகுந்த வருமானம் நாளை நீங்கள் நம்புகள்
கழனி விற்று கல்வி கற்ற காலம் மாறி போச்சு
காந்தி சொன்ன கிராமம்தானே கையைகூப்பும் விளம்பரத்தில் பேச்சு
சென்னையில் இருந்து சில மைல்கல்
சீர்காழிக்கு பக்கத்தில்
கோவையில் இருந்துவர குளிர்சாதன வண்டி
குளிதலையின் முந்தைய வெற்றிலை
சேரே இல்லா இயற்கை ஏரி
சிதம்பரத்தை ஒட்டினார் போல்
ஆறுக்கும் பேருக்கும் ஐம்பது அடி
அலைக்கும் கரைக்கும் தூரமில்லாமல்
நாட்டு பனையும் நார்த்தையும்
நரியின் தோளோடு நாயும்
உலவி திரியும் ஊர்
உல்லாச சுற்றுலாவுக்கு சேர்
கிளைடர்* நிறுத்த தனிக்கட்டணம்
கிணற்று நீரை பார்பதற்கும் செலுத்தனும்
குடும்பமாய் வந்தால் கட்டண கழிவு
குதூகலமாய் வாருங்கள் நண்பர்களே
வார விடுமுறை வரலாறில் மறைந்ததால்
மாத விடுமுறையில் மனம் மகிழலாம் வாருங்கள்
வருட விடுமுறை வருவதற்குள்ளே
வாய்ப்பு காத்திருக்கிறது வாருங்கள்
முப்பாட்டன் முந்திய கிராமத்தை காண
முட்டாளாய் மாறிய பட்டணம் தவிர்த்து
நெல்லு விளையும் நேர் காணலை
நேரமிருந்தால் ஐந்து நிமிடம் கண்டு செல்லுங்கள்
இரண்டாயிரத்து ஐநூறு கலோரி
இறாலின் வேதியியல் சுவை
கொழுப்பே இல்லாமல் கோழி மாத்திரை
குடிநீர் இல்லாமல் விழுங்க வசதியும் உண்டு
வெட்டி கதைகளை விஞ்ஞான அழிவினை
கொட்டி தீர்த்திடும் குற்றால அருவியும்
மென்பொருள் கண்காணிப்பில் வீசிடும் தென்றலும்
மீறினால் தண்டம் மட்டுமே இங்கு உண்டு
செத்து போய்விட்டால் சொர்க்கமென்று இங்கு
சொத்தை கொடுத்திடுங்கள் சொல்லுகின்றோம்
பழைய கிராமத்தை உருவாக்கி உங்கள் சமாதிக்கு
பணமும் அனுப்பி வைப்போம் மாதமாதம்
*பிறமொழிச்சொல்